ராகுல் காந்தியை பாராட்டி தள்ளிய சிவ சேனா…. கொரோனா நெருக்கடியில் நேர்மறையான வெளிப்பாடு…அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது…..

 

ராகுல் காந்தியை பாராட்டி தள்ளிய சிவ சேனா…. கொரோனா நெருக்கடியில் நேர்மறையான வெளிப்பாடு…அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது…..

கொரோனா நெருக்கடி சூழலில் நேர்மறையான வெளிப்பாடு அவரது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது என ராகுல் காந்தியை திடீரென சிவ சேனா பாராட்டி தள்ளியுள்ளது.

சிவ சேனாவின் கொள்கைகளை பேசும் பத்திரிகையான சாம்னாவில் நேற்று ராகுல் காந்தியை புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தது. சாம்னாவில், பிரதமர் நரேந்திர மோடியுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தொற்று நோய்க்கு எதிராக போராட ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுவதால் வார்த்தை போரில் ஈடுபடுவதற்கான நேரம் இதுவல்ல என்று ராகுல் காந்தி சொல்லியபோது தனது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். 

பா.ஜ.க.

ராகுல் காந்தி குறித்து சில கருத்துக்கள் உண்டு. அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா குறித்தும் சில கருத்துக்கள் உண்டு. பா.ஜ.க.வின் வெற்றியின் பாதியில் ராகுலின் பிம்பத்தை கெடுத்தன் வாயிலாக கிடைத்தது. அது இன்றும் தொடருகிறது. ஆனால் தற்போதைய நெருக்கடியில் ராகுல் காந்தி எடுத்த நிலைப்பாட்டை பாராட்ட வேண்டும்.

சிவ சேனாவின் சாம்னா

நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, ஒரு எதிர்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு நடத்தை விதிமுறைகளை ராகுல் காந்தி உருவாக்கி விட்டார். மத்திய பிரதேசத்தில் அரசை கவிழ்க்க ஒவ்வொருவரும் பிசியாக இருந்த போது, ராகுல் காந்தி கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசை தட்டி எழுப்பி கொண்டு இருந்தார். நாட்டின் நலனுக்காக, கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், ராகுல் காந்தி நேரடியாக ஆலோசனை  நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.