ராகுல் காந்தியின் வெளிநாடு ரகசிய மர்மம்… உல்லாசத்திற்காக அந்த மாதிரி இடங்களுக்கு பயணம்..!

 

ராகுல் காந்தியின் வெளிநாடு ரகசிய மர்மம்… உல்லாசத்திற்காக அந்த மாதிரி இடங்களுக்கு பயணம்..!

உல்லாசமாக இருக்க தாய்லாந்து போயிட்டு வந்துட்டு தாய்நாட்டு மேல விசுவாசமாக இருப்பதுபோல ராகுல், சோனியா கம்பெனி நடிக்குது.

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு வரும் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநில சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று திடீரென பாங்காக்கிற்கு புறப்பட்டு சென்றது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளாது. 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திடீர் திடீரென வெளிநாடு பயணம் செய்வதும், வெளிநாடுகளில் அவர் எங்கே செல்கிறார்? எங்கே தங்குகிறார்? என்ற மர்மமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது பற்றி சில மாதங்களுக்கு முன் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன் பொதுக்கூட்டம் ஒன்றில், ’ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் வெளியில் செல்ல கூடியதாக இடமாக இல்லாததால் அவர் ரகசியமாக செல்கிறார்’ என்றார்.

Rahul

2015 -ம் ஆண்டு ராகுல் காந்தி திடீர் என 50 நாட்களுக்கு மேல் மாயமாகி இருந்தார். இந்த வெளிநாடு பயணம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக 2015 ஆம் ஆண்டு திருச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,

“பிரதமர் மோடி வெளிநாடு போகிறாரே அவர் எங்கு தூங்குகிறார் என்பது  உள்ளிட்டவற்றை வெளிப்படையாக சொல்கிறோம். ஆனால் ராகுல்காந்தி 50 நாள் வெளிநாடு போனாரே, எந்த நாட்டுக்கு போனார்ன்னு தெரியுமா, தாய்லாந்துக்கு!. அந்த நாடு எதுக்கு விசேஷம்ன்னு ஊருக்கே தெரியும்.

இதை வெளியில் சொன்னால் மக்கள் எதனால் அடிப்பாங்க தெரியுமா? உல்லாசமாக இருக்க தாய்லாந்து போயிட்டு வந்துட்டு தாய்நாட்டு மேல விசுவாசமாக இருப்பதுபோல ராகுல், சோனியா கம்பெனி நடிக்குது.  இதெல்லாம் வேஷம்” என்றார்.

rahul

2017 ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட முக்கிய அரசியல் நடவடிக்கைகள் நடந்த அந்த நேரத்தில் கூட, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்த ராகுல் காந்தி, தான் இத்தாலிக்கு செல்ல இருப்பதாகவும், தனது பாட்டியையும் (சோனியாவின் தாயார்), குடும்பத்தினரையும் சந்திக்க இத்தாலி செல்கிறேன். அங்கு சில நாட்கள் அவர்களோடு தங்கி இருக்க போகிறேன், என தனது ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துவிட்டு மாயமாகி போனார். 
இந்த சம்பவம் பற்றியும் பாஜக தரப்பில் இருந்து ராகுல் காந்தி ரகசிய வெளிநாடு பயணம் பற்றி பல விதமான கேள்விகள் எழுப்பப்பட்டு, அது பரபரப்பாக பேசப்பட்டது. 

ராகுல் காந்தியின் சர்ச்சையான தொடர் வெளிநாட்டு பயணம் தொடர் கதை தான். தற்போது வட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் சமயத்தில், மீண்டும் ரகசிய பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அவர் எங்கே சென்றுள்ளார்? எதற்காக சென்றுள்ளார்? எங்கே தங்குகிறார் என்பது மர்மமாகவே உள்ளது.

rahul

இதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது 2007-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி தனது நண்பருடன் தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார்; அந்தத் தகவல் முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு ஸ்டாலின் விமானம் ஏறும் போது தான் தெரிந்தது. அமைச்சராக இருந்து கொண்டு மத்திய அரசின் அனுமதி பெறாமல் ஸ்டாலின் வெளிநாடு சென்றதின் ரகசியம் பற்றி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பினார்.