ராகுல் காந்தியின் புதிய இந்தியா டிவிட்! பொங்கிய பா.ஜ. தலைவர்கள்! டிவிட்டரில் களைகட்டிய சண்டை!

 

ராகுல் காந்தியின் புதிய இந்தியா டிவிட்! பொங்கிய பா.ஜ. தலைவர்கள்! டிவிட்டரில் களைகட்டிய சண்டை!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், பாதுகாப்பு படை வீரர்கள் நாய்களுடன் யோகா பயிற்சி செய்யும் போஸ்ட்டை பதிவு செய்து இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராகுலின் டிவிட்டுக்கு பா.ஜ.க.வினர் கடுமையாக பொங்கி வருகின்றனர்.

 

யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உலகம் முழுவதும் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வாடிக்கை. அதேபோல் நேற்று ஜூன் 21 என்பதால் நம் நாடு முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

யோகாவில் அதிக ஆர்வம் காட்டும் நம்ம பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மற்ற பிரபல தலைவர்களும் தங்கள் பகுதியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

ஆனால் நம்ம காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி என்ன செய்தார் தெரியுமா? அவரும் யோகா செய்திருப்பார்ன்னு நினைத்தா உங்க கன்னத்துல போட்டுங்க. வழக்கம் போல யோகா தினத்தை வைத்தும் மோடி அரசை கிண்டல் செய்தார். ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பாதுகாப்பு படையின் நாய் பிரிவு வீரர்கள் நாய்களுடன் யோகா செய்யும் போட்டாவை போஸ்ட் செய்தார். அதன் கீழ் புதிய இந்தியா என்று பதிவு செய்து இருந்தார். 

அமித் ஷா

ராகுலின் இந்த ட்விட் தற்போது பரபரப்பாகி உள்ளது. ராகுலின் டிவிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் குறிப்பாக பா.ஜ. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ. தலைவர் அமித் ஷா இது குறித்து தனது டிவிட்டரில், முத்தலாக் நடைமுறைக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தன் மூலம் அவர்களின் எதிர்மறையான எண்ணங்கள் தெரிந்தது. தற்போது யோகா தினம் மற்றும் படைகளை அவர்கள் (மீண்டும்) அவமதித்துள்ளனர். நேர்மறையான எண்ணங்கள் பரவும் என்று நம்புகிறேன். அது கடுமையான சோதனைகளைலிருந்து மீண்ட வரும் உதவும் என்று பதிவு செய்து இருந்தார்.