ராகுலுடன் கைகோர்க்கும் கமல்: உடைகிறது திமுக-காங்கிரஸ் கூட்டணி?

 

ராகுலுடன் கைகோர்க்கும் கமல்: உடைகிறது திமுக-காங்கிரஸ் கூட்டணி?

ராகுல் காந்தியுடன் தேர்தல் கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசித்ததாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மதுரை: ராகுல் காந்தியுடன் தேர்தல் கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசித்ததாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற தனிக் கட்சியை சில மாதங்களுக்கு முன் தொடங்கினார். கட்சி தொடங்கியது முதல் பேட்டிகள், அறிக்கைகள், கண்டனங்கள், கூட்டங்கள் என பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மக்கள் நீதி மய்யம்.

கட்சி தொடங்கியது முதலே திமுக ஆதரவு நிலைப்பாட்டில் கமல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதிமுக – திமுகவுடன் கூட்டணி இல்லை என சமீபத்தில் கமல் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் – திமுக கூட்டணி உடையும் என்றும் அதன்பின் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கும் என்றும் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

thirunavukarasar

திமுக – காங்கிரஸ் கூட்டணி எந்த விரிசலுமின்றி சென்று கொண்டிருக்கும் இந்த சூழலில் கமலின் அந்த கருத்து, அரசியல் நோக்கர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் திருநாவுக்கரசர், “ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸுடன் கூட்டணியில் இணைவதாகக் கமல் கூறியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் திமுக மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் வட்டாரத்திலும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.