ரயில் விபத்துக்களால் கடந்த 11 மாதங்களில் எந்தவொரு பயணியும் உயிர் இழக்கவில்லை…. இந்தியன் ரயில்வே தகவல்

 

ரயில் விபத்துக்களால் கடந்த 11 மாதங்களில் எந்தவொரு பயணியும் உயிர் இழக்கவில்லை…. இந்தியன் ரயில்வே தகவல்

இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக கடந்த 11 மாதங்களில் ரயி்ல் விபத்துக்களால், ஒரு பயணி கூட உயிர் இழக்கவில்லை என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியன் ரயில்வே கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியன் ரயில்வே இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நிதியாண்டின் இதுவரையிலான காலத்தில் சிறந்த பாதுகாப்பு சாதனை  படைத்துள்ளது. இந்த நிதியாண்டில் 1.4.2019 முதல் 24.02.2020 வரையிலான காலத்தில் ரயில் விபத்துக்களால் எந்தவொரு ரயில் பயணியும் உயிர் இழக்கவில்லை.

ரயில்கள்

166 ஆண்டுகளுக்கு முன் இந்திய ரயில்வே அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் இதுவரையிலான காலத்தில் இந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில்தான் சிறந்த பாதுகாப்பு சாதனையை படைத்துள்ளது. அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு செயல்பாட்டை மேம்படுத்த இந்திய ரயில்வே மேற்கொண்ட விளைவாகத்தான் கடந்த 11 மாதங்களில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இருப்புப்பாதை பராமரிப்பு பணிகள்

ரயில் டிராக்குகளை பெரிய அளவில் புதுப்பித்தல், திறன்மிக்க டிராக் பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்களை கடுமையாக கண்காணித்தல், ரயில்வே பணியாளர்களுக்கு முன்னேற்றமான பயிற்சி, சிக்னல் அமைப்புகளில் முன்னேற்றம், பாதுகாப்பு பணிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மற்றும் பாரம்பரிய ஐ.சி.எப். பெட்டிகளிலிருந்து நவீன மற்றும் பாதுகாப்பான எல்.எச்.பி. பெட்டிகளுக்கு மாறி வருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு மேம்படுத்தலுக்காக இந்தியன் ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.