ரயில்வேயாக நமஹ…கார்ப்பரேட்டுகளுக்கு நமஹ… தாரைவார்த்தாச்சு நமஹ…

 

ரயில்வேயாக நமஹ…கார்ப்பரேட்டுகளுக்கு நமஹ… தாரைவார்த்தாச்சு நமஹ…

’எல்.கே.ஜி. பாடப்புத்தகத்தில் தொடங்கி இந்தியாவில் எல்லாமே காவிமயமாகவும் கார்ப்பரேட் மயமாகவும் ஆகிவரும் நிலையில், ரயில்வே துறையையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது.

’எல்.கே.ஜி. பாடப்புத்தகத்தில் தொடங்கி இந்தியாவில் எல்லாமே காவிமயமாகவும் கார்ப்பரேட் மயமாகவும் ஆகிவரும் நிலையில், ரயில்வே துறையையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது.

indian railways

வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்குகின்றன. அதே பாணியில் இந்தியாவிலும் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கு பயங்கர எதிருப்புகள் கிளம்பியதால் மோடி ரயில்வே துறையை மட்டும் சற்று வீடு வைத்திருந்தார். ஆனால் மக்கள் மறுபடியும் முடிசூட்டிய மமதையில் ரயில்வே துறையை கார்ப்பரேட்களின் கையில் தவணை முறையில் தாரை வார்க்கத் தயாராகிவிட்டார். இதன்  முதல்கட்டமாக 500 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் தனியார் ரயில்கள் விடப்படும். டெல்லி – லக்னோ, மும்பை – ஷீரடி, சென்னை – பெங்களூரு,  திருவனந்தபுரம் – கண்ணுர், மும்பை- அகமதாபாத் மார்க்கங்களை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

train

இதில், டெல்லி- லக்னோ மார்க்கத்தில் நாள் ஒன்றுக்கு 50 ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டிலேயே வெகு பிசியான மார்க்கம் இது. மும்பை – ஷீரடி மார்க்கத்தில் சேவைக் குறைவு. புகழ்பெற்ற சாயிபாபா கோயில்தான் இந்த மார்க்கத்தில் முக்கியமானது. முதலில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாத்துறை நிறுவனத்துக்கு (IRCTC) இரு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்படும். அடுத்த 100 நாள்களுக்குள் முதல் ரயில் ஓடத் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. 

இதுபோல் நாட்டின் பல முக்கிய மார்க்கங்களில் தனியார்கள் இயக்க ஏலம் விடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. முதலில் ஒரு இரவுக்குள் சென்றடையும் ரயில்களின் மார்க்கங்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. அதேபோல், இன்ஜின்கள், பெட்டிகள் தயாரிப்பு நிறுவனங்கள், பராமரிப்பு நிலையங்களையும் கார்ப்பரேட் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் தனியாரை நுழைய விடுவது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே நாட்டில் 23 ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வகையில் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில், மால், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள் போன்றவை அமைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

railway

ஆனால் இதுகுறித்து அகில இந்திய ரயில்வே யூனியன் அமைப்பின் செயலாளர் ஷிவ் குமார் மிஷ்ரா கூறுகையில், “எந்தச் சூழலிலும் இந்தத் துறையில் தனியார் மயத்துக்கு அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஒரு பேட்டியில், “ரயில்கள் தனியார் மயமாக்கப்படாது. வருங்காலத்திலும் நிகழாது” என்று தெரிவித்திருந்தார்.  ஆனால் மோடிக்கு பியூஸ் கோயல் பேட்டியெல்லாம் எம்மாத்திரம். கார்ப்பரேட்களுக்கு எதையாவது தாரைவார்க்கவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால்’என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’ரகமாச்சே அவர்.