ரயில்களில் வெடிபொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது.. மீறினால் கைது : ரயில்வே காவல்துறை!

 

ரயில்களில் வெடிபொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது.. மீறினால் கைது : ரயில்வே காவல்துறை!

வியாபாரிகள் கூட பட்டாசுகளை ரயிலில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

தீபாவளி வருவதையொட்டி மக்கள் பட்டாசுகள் வாங்கத் தொடங்கி விட்டனர். பட்டாசுகளை வாங்கிய பின்பு மக்கள் அதனை ரயில்கள் மூலமாகவோ அல்லது பேருந்து மூலமாகவோ வீட்டிற்குக் கொண்டு செல்வர். மின்சார ரயில்களில் அவ்வாறு வெடிபொருட்களைக் கொண்டு செல்லும் போது, சிறிதாகத் தீப்பற்றிக் கொண்டால் கூட அது பெரிய ஆபத்தில் முடியும்.

Awareness

இது குறித்து இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல்துறை, பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். அந்த பேரணியில் கலந்து கொண்ட டி.எஸ்.பி முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். 

DSP

அதில் ரயில்களில் பட்டாசு போன்ற வெடிபொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது, பட்டாசுகள் எடுத்துச் செல்வதைக் கண்காணிக்கத் தீவிரப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் அதனை மீறி எடுத்துச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும்  தெரிவித்துள்ளார். மேலும், வியாபாரிகள் கூட பட்டாசுகளை ரயிலில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஐயப்ப தரிசனத்திற்காகச் செல்லும் ஆண்கள் பயணத்தைத் துவங்குவதற்கு முன், ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும்  டி.எஸ்.பி முருகன் தெரிவித்துள்ளார்.