ரயிலில் சொந்த ஊர் திரும்ப தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது…. மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்…

 

ரயிலில் சொந்த ஊர் திரும்ப தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது…. மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்…

ரயிலில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடம் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது என மத்திய அரசை குற்றச்சாட்டியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

லாக்டவுனால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேரமுடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தின. இதனையடுத்து மத்திய அரசு ரயில்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்தது. மேலும் அதற்கு தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது.

வெளிமாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்

ரயில் பயணத்துக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடம் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது என மத்திய அரசை உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டரில், பா.ஜ.க. அரசு முதலாளிகளுடன் நிற்கிறது ஏழைகளுடன் அல்ல. ஆதரவற்ற தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் ரயிலில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல பா.ஜ.க. அரசு கட்டணம் வசூலிக்கிறது என்ற செய்தி வெட்கடக்கேடானது.

வெளிமாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்

பா.ஜ.க. அரசு முதலாளிகளின் கோடிக்கணக்கான ரூபாயை தள்ளுபடி செய்து பணக்காரர்களுடன் நிற்கிறது  மற்றும் ஏழைகளுக்கு எதிராக நிற்கிறது என்பது இன்று தெளிவாகியுள்ளது. பேரழிவு நேரத்தில் சுரண்டவது பணம் கொடுப்பவர்களின் வேலை. அரசு வேலை  அல்ல என பதிவு செய்து இருந்தார்.