ரம்ஜான் ஸ்பெஷல்: “சொர்க்கவாசல் திறக்கப்பட்டது”… இதுவே இஸ்லாமியர்களின் நம்பிக்கை!!

ரம்ஜான் ஸ்பெஷல்: “சொர்க்கவாசல் திறக்கப்பட்டது”… இதுவே இஸ்லாமியர்களின் நம்பிக்கை!!

இஸ்லாமியர்களுக்குமே, அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், சாத்தான்கள் விலகி ஓடும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதிகின்றனர்.  

இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு… இந்த நோன்பு கடைபிடிக்கும் இந்த ஆண்டுக்கான ரமலான் மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது . நோன்பின் போது பசித்திருப்பது மட்டுமின்றி, ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் இஸ்லாமியர்கள்…

ramadan

கடவுளாக பார்க்கப்படும் திருக்குர் ஆன்  அருளப்பட்ட மாதம் ஆதலால் எந்தவித சண்டைகளிலோ அல்லது முரண்பாடான பேச்சுவார்த்தையிலோ இஸ்லாமியர்கள் ஈடுபட மாட்டார்கள். அன்றாட வாழ்வில் சாப்பிடுவது தூங்குவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஆண்டவனை தொழுவதும் என அழுத்தி கூறுகின்றனர் இஸ்லாமியர்கள். நம் வாழ்வில் அகமும்-புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சியாகவே இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது.

ramadan 1

நோன்பு காலத்தில் 30 நாட்கள் மனதையும் உடலையும் தூய்மையாக களங்கம் இல்லாமல் வைத்துக்கொண்டால் மற்ற 11 மாதங்கள் நாம் தூய்மையாக வாழ்ந்ததற்கு சமம் என்கின்றனர் இஸ்லாமியர்கள். தாம் பட்டினியாக கிடப்பதைவிட பட்டினியாய் கிடக்கும் ஏழை மக்களுக்கு உணவளிப்பதே நோன்பின் உண்மையான மகத்துவம் என்பது இஸ்லாமியர்களின் கருத்தாகும். தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் பின்பற்றப்படும் கொள்கைகள்.  இந்திகளுக்கு எப்படி மார்கழி மாதத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறதோ? கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு பாவ மன்னிப்புக்காக ஞாயிற்றுக்கிழமை உள்ளதோ… அப்படிதான் இஸ்லாமியர்களுக்கு இந்த ரமலான் காலம்….