ரம்ஜான் ஸ்பெஷல்: இறைச்சியை அரைத்து தயார் செய்யப்படும் நோன்பு கஞ்சி!!

 

ரம்ஜான் ஸ்பெஷல்: இறைச்சியை அரைத்து தயார் செய்யப்படும் நோன்பு கஞ்சி!!

சூரிய உதயத்திற்கும் அஸ்தமானத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் உணவு, தண்ணீர் என்று எதையும் அருந்தாமல் இறைவனை வழிபடுவதே இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் நோன்பாகும்.

சூரிய உதயத்திற்கும் அஸ்தமானத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் உணவு, தண்ணீர் என்று எதையும் அருந்தாமல் இறைவனை வழிபடுவதே இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் நோன்பாகும். ராமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் தினமும் மாலை நோன்பு திறக்கும் நிகழ்வை குழுவாகவே மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வில் முக்கிய இடம் பிடிப்பது நோன்பு கஞ்சி. இந்த நோன்பு கஞ்சி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். 

Kanji

பாசிப் பயிறு, வெந்தயம், தேங்காய்ப்பால் போன்ற உடலுக்கு குளுமை தரக் கூடிய பொருட்கள் சேர்க்கப்படும் நோன்பு கஞ்சி அரிசி மற்றும் அரைத்த இறைச்சி கொண்டு சமைக்கப்படுகின்றது. இவற்றுடன் சுவை மற்றும் மணத்தை கூட்டுவதற்கு சின்ன வெங்காயம், கேரட், தக்காளி, சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், பிரியாணி இலை, கொத்தமல்லி, புதினா போன்ற  பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. 

Kanjii

குக்கரில் தண்ணீர் ஊற்றி, அதில் பயத்தம் பருப்பு, அரிசியைப் போட்டு நன்கு  கொதிக்கவிடவேண்டும். அதன்பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கேரட், புதினா, பிரியாணி  இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக வைக்கவேண்டும். இந்த கலவையானது நன்கு வெந்ததும், அதனை  பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, அதனுடன் இறைச்சி அறைத்துவைத்த பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.

Nonbu kanjee

தண்ணீர் கூட பருகாமல், தினமும் 12 மணி நேரம் நோன்பிருந்தவர்கள், தங்களின் விரதத்தை முடித்துக்கொள்ள நோன்பு கஞ்சி ஒரு சிறந்த உணவுப்பொருள் என்று கூறப்படுகின்றது. காரணம் அதில் சேர்க்கப்படும் உணவுப்பொருட்கள் என்று கூறுகின்றனர் இஸ்லாமியர்கள்