ரம்ஜான் மாத தாராவீஹ் தொழுகைகளை வீட்டில் மேற்கொள்ளுங்கள்…. உலாமாக்கள், முப்திகள் வேண்டுகோள்…

 

ரம்ஜான் மாத தாராவீஹ் தொழுகைகளை வீட்டில் மேற்கொள்ளுங்கள்…. உலாமாக்கள், முப்திகள் வேண்டுகோள்…

ரம்ஜான் மாத தாராவீஹ் தொழுகைகளை வீட்டிலேயே மேற்கொள்ளுங்கள் என முஸ்லீம் சமுதாயத்தினருக்கு உலாமாக்கள் மற்றும் முப்திகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறைநம்பிக்கை (கலிமா), இறைவழிபாடு (தொழுகை), தர்மங்கள் செய்தல் (ஜாகத்), நோன்பு மற்றும் புனித பயணம் (ஹஜ்) ஆகிய ஐந்து பெரும் கடமைகளை இஸ்லாம் மார்க்கம் போதிக்கிறது. இஸ்லாமிய மாதங்களில் ரம்ஜான் மாதம் இறை அருள் பெற்ற சிறப்பு மாதமாக கருதப்படுகிறது. ரம்ஜான் மாதத்தில் முஸ்லீம்கள் தங்களது நான்காவது கடமையான நோன்பை மேற்கொள்கின்றனர்.

தாராவீஹ் தொழுகைகள்

ரமலான் மாதம் முழுவதும் முஸ்லீம்கள் தினந்தோறும் இரவு சிறப்பு தொழுகையை (தாராவீஹ்) பள்ளிவாசல்களில் மேற்கொள்வர். வரும் 24 அல்லது 25ம் தேதியன்று ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க லாக்டவுன் நடைமுறையில் உள்ளதால் மத வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் மாத சிறப்பு இரவு தொழுகைகளை பள்ளிவாசல்களுக்கு சென்று மேற்கொள்வதற்கு பதிலாக தங்களது வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறு உலாமாக்கள் மற்றும் முப்திகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குரான்

லாக்டவுனை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்துள்ள வழிமுறைகள், சுகாதார மற்றும் மருத்துவ நிபுணர்களின் அறிவுரைகளை பின்பற்றுங்கள். மேலும் சமூக விலகள் உள்ளிட்ட வரும தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடியுங்கள். தாராவிஹ் தொழுகைக்காக கூடுவதை தவிருங்கள். புனித குரானை படியுங்கள் என மேலும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். தற்போது மனித குலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தொற்றுநோயான கோவிட்-19ஆல் யாரும் பாதிக்கபடாமல் இருக்க தொழுகையின் போது அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு முஸ்லீம் மதகுருமார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.