ரணில் பிரதமராக இருந்தால் அதிபராக இருக்க மாட்டேன்: சிறிசேனா அதிரடி

 

ரணில் பிரதமராக இருந்தால் அதிபராக இருக்க மாட்டேன்: சிறிசேனா அதிரடி

ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமரானால் நான் அதிபராக இருக்க மாட்டேன் என சிறிசேனா அதிரடியாக கூறியுள்ளார்.

கொழும்பு: ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமரானால் நான் அதிபராக இருக்க மாட்டேன் என சிறிசேனா அதிரடியாக கூறியுள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவிற்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இருந்துவந்த மோதலை அடுத்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்து கடந்த 26-ம் தேதி அதிரடியாக நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக சிறிசேனா நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதிபர் தனது பதவியை பறிக்க அதிகாரம் இல்லை. நான்தான் இலங்கையின் பிரதமர் எனவும், அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்வும் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தினார். இருப்பினும் சிறிசேனா நாடாளுமன்றத்தை கூட்டாமல் வரும் நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கியுள்ளார். 

இந்நிலையில், சுதந்திரக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிபர் சிறிசேனா, ரணில் மீண்டும் பிரதமர் ஆனால் தான் ஒரு நிமிடம் கூட அதிபர் பதவியில் நீடிக்க மாட்டேன். புதிய அரசின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு, சுதந்திரக் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.