ரஜினி ஹீரோவாக நடித்த முதல் இந்திப்படம் !

ரஜினி ஹீரோவாக நடித்த முதல் இந்திப்படம் !

அந்தாகாநூன் என்கிற பாலிவுட் படத்தில் ரஜினி முன்பே நடித்திருந்தாலும்,அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் காங்வா! அப்போது கங்குவா என்று தமிழகத்திலும் கொண்டாடப்பட்ட இந்தப் படம் வெளிவந்தது 1984.தமிழில் வந்து பெரிய பெற்ற படமான மலையூர் மம்பட்டியான் படத்தின் இந்தி வடிவம் இது.

rajini

தியாகராஜன் நடித்த வேடத்தில் ரஜினியும் சரிதா வேடத்தில் சபானா அஸ்மியும் நடித்து இருந்தார்கள். இவர்களைத் தவிர பிரபல இந்தி வில்லன் அம்ரிஷ் பூரி கெட்ட ஜமீன்தார் வேடத்தில் மிரட்டி இருந்தார்.சுரேஷ் ஓபராய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தமிழ் மம்பட்டியானுக்கும் காங்வாவுக்கும் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை,கிராமத்து மக்களை மிருகங்களை போல நடத்தும் ஜமீன்,அவரை கொன்று விட்டு காட்டில் ஒளிந்துகொண்டு வாழும் நாயகனும் அவன் நண்பர்களும் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழகளுக்கு கொடுக்கும் கதைகள் தமிழுக்குத்தான் புதிது.இந்தியில் இது போன்ற ராபின் ஹூட் கதைப் படங்கள் ஏராளம்.இருந்தும் காங்வா பெரிய வெற்றி படம் ஆனது.தமிழ் மலையூர் மம்பட்டியான் படத்தை இயக்கிய ராஜசேகர்தான் இந்தியிலும் இயக்கி இருந்தார்.இசை பப்பிலஹரி.