ரஜினி, விஜய்யை தொடர்ந்து கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?!

 

ரஜினி, விஜய்யை தொடர்ந்து கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?!

தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்திருந்தார். 

சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து இன்று முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. ரஜினியுடன் வில்லனாக நடித்ததைத் தொடர்ந்து தற்போது விஜய்க்கு வில்லனாக  மாறியுள்ளார். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்திருந்தார். 

sethupathi

சமீபத்தில்  கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, கமல் சாருடன்  நடிக்க வாய்ப்பு வந்தும் அதை தவறவிட்டுவிட்டேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார்.  தற்போது விஜய் சேதுபதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

kamal

அதாவது இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

kamal

கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல் ஹாசனுக்கு காலில்  அறுவை சிகிச்சை நடந்தது. சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .