ரஜினி ரசிகரை வெட்டிய சீமான் ஆதரவாளர்கள்: சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

 

ரஜினி ரசிகரை வெட்டிய சீமான் ஆதரவாளர்கள்: சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

ரஜினி ரசிகர் ஒருவர் சீமான் குறித்து  விமர்சனம் செய்ததால் அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: ரஜினி ரசிகர் ஒருவர் சீமான் குறித்து  விமர்சனம் செய்ததால் அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இது குறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடனடியாக பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் பலத்த காயமடைந்த பழனிசாமி ரத்த காயங்களோடு தன்னை வெட்டியவர்கள் குறித்து தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ வாட்ஸ்அப்பில் பரவியது. அதில், ரஜினி ரசிகரான பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால்  சீமானின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பழனிசாமி புகார் கூறினார்.  பழனிசாமி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.