ரஜினி மகளாக நடிக்கும் பிரபல நடிகை: ரசிகர்கள் உற்சாகம்!

 

ரஜினி மகளாக நடிக்கும் பிரபல நடிகை:  ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் ரஜினிகாந்த் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

rajini

பேட்ட படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்படத்தின் முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கவுள்ளது.

nayan

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகை நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் போராளி, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

arm

அந்த வரிசையில் தற்போது இவர் தலைவர் 166 படத்தில் ரஜினிகாந்த் மகளாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.  இவர் ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமல் ஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார். 

nivetha

முன்னதாக தலைவர் 166 படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படங்கள் கதை திருட்டு வழக்கில் சிக்கி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுவதால்,  ரஜினி ரசிகர்கள் டரியலில் இருக்கின்றனர். 

இதையும் வாசிக்க: சார் நீங்கள் ஐஸ் கிரீம் போன்றவர்; ஸ்ரீ தேவி மகள் புகழ்ந்த காலா நடிகர்?