ரஜினி பா.ஜ.கவில் இணைவார் என்று நாங்கள் சொன்னதே இல்லை : முரளிதர் ராவ்

 

ரஜினி பா.ஜ.கவில் இணைவார் என்று நாங்கள் சொன்னதே இல்லை :  முரளிதர் ராவ்

எனக்கும் காவி நிறத்தைப் பூச முயற்சி செய்கின்றனர். பா.ஜ.க எனக்கு எந்த அழைப்பும் கொடுக்கவில்லை

நடிகர் ரஜினி காந்த் இன்று காலை மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டதற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Rajini

அதில் அவர், ‘எனக்கும் காவி நிறத்தைப் பூச முயற்சி செய்கின்றனர். பா.ஜ.க எனக்கு எந்த அழைப்பும் கொடுக்கவில்லை. வள்ளுவர் ஞானி சித்தர், ஞானி சித்தர்களை ஒருகுறிப்பிட சாதி மதத்திற்குள் அடக்கி விட முடியாது’ என்று கூறினார்.

Murali

இது குறித்து சென்னையில் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ், ‘திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். திருக்குறள் தமிழர், இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகிற்கே சொந்தமானது தான் திருக்குறள். ரஜினி பா.ஜ.கவில் இணைவார் என்று நாங்கள் ஒரு போதும் கூறியதில்லை. தமிழக பாஜகவின் தற்போதைய இலக்கு உள்ளாட்சித் தேர்தல் மட்டும் தான். அதை எதிர்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம். அது தவிர வேறு யூகங்கள் மீது பா.ஜ.க அக்கறை கொள்ளாது’ என்று கூறியுள்ளார்.