ரஜினி பாட்டுப் பாடி அமெரிக்காவில் 7 கோடி வென்ற தாராவி இசைக்குழு!

ரஜினி பாட்டுப் பாடி அமெரிக்காவில் 7 கோடி வென்ற தாராவி இசைக்குழு!

கடந்த சில ஆண்டுகள் முன்புகூட ஏ.ஆர்.ரகுமான் இசைப்பள்ளியில் படிக்கும் லிடியன் நாதஸ்வரம் என்கிற 8 வயது சிறுவன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு ஒரு மில்லியன் டாலர் பரிசு பெற்றான்.( இந்திய பணத்தில் 7 கோடி ரூபாய்).

அமெரிக்காவின் என்.பி.சி தொலைக்காட்சியில் ‘ அமெரிக்கா காட் டேலண்ட்’ என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் உலகெங்கும் இருந்து பன்முக கலைஞர்கள் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளி வருகிறார்கள். 

கடந்த சில ஆண்டுகள் முன்புகூட ஏ.ஆர்.ரகுமான் இசைப்பள்ளியில் படிக்கும் லிடியன் நாதஸ்வரம் என்கிற 8 வயது சிறுவன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு ஒரு மில்லியன் டாலர் பரிசு பெற்றான்.( இந்திய பணத்தில் 7 கோடி ரூபாய்).

lydian

இப்போது மீண்டும் அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. வீ அன்பீட்டபிள்(V Unbeatable) என்கிற பெயர் கொண்ட மும்பைத் தாராவியைச் சேர்ந்த இசைகுழு இந்தப் போட்டியில் கலந்து கொண்டது.29 பேர் கொண்ட அந்தக்குழு பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குத் தேர்வானது.சில தினங்கள் முன்பு இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது.அதில் தாராவி இசைக்குழு ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்காக அனிருத் இசையமைத்த ‘ மரண மாஸ்’ பாடலுக்கு நடனமாடியது.

இந்த நடன வீடியோ இணையத் தளங்களில் தீபோல பரவி இதுவரை 44 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் போட்டி முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.அதில் ரசிகர்கள் எதிர்பாத்தது போலவே தாரவியின் வி அன்பீட்டபிள் குழு முதல் பரிசை பெற்றுச் சென்றது.அவர்களுக்கு முதல் பரிசாக 7 கோடியே 14 லட்சம் வழங்கப்பட்டது. மும்பைத் தாராவி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி,அங்கிருந்து போன ஒரு இசைக்குழு தமிழ் பாட்டைப் பாடி அமெரிக்காவில் சாதித்திருப்பதை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.