ரஜினி கமல் யார் வந்தாலும் நல்லது பண்ணுறது கஷ்டம்: இயக்குநர் ஷங்கர் அதிரடி பேட்டி!

 

ரஜினி கமல் யார் வந்தாலும் நல்லது பண்ணுறது கஷ்டம்: இயக்குநர் ஷங்கர் அதிரடி பேட்டி!

இன்றைய அரசியல் சூழல்ல யார் வந்தாலும் நல்லது பண்றது ரொம்ப கஷ்டம் என்று இயக்குநர்  ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: இன்றைய அரசியல் சூழல்ல யார் வந்தாலும் நல்லது பண்றது ரொம்ப கஷ்டம் என்று இயக்குநர்  ஷங்கர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் 2.0. இந்த படம் இம்மாதம் இறுதியில் வெளியாகஉள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

shankar

இந்நிலையில் இயக்குநர்  ஷங்கர் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘ 2.0 படத்தின் சிஜி வேலைகள் உலகின் பல்வேறு நாடுகள்ல நடந்துகிட்டிருக்கு. மிகப்பெரிய பட்ஜெட், பிரமாண்டம், கிராபிக்ஸ் இதையெல்லாம் மறந்துட்டு, ‘2.0’வில் உள்ள ஆத்மார்த்தமான கதையை எதிர்பார்த்து தியேட்டருக்கு வாங்க. என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கமலுடன் இணையவுள்ள இந்தியன் 2 படத்தைப் பற்றி பேசியுள்ள அவர், ‘இந்தியன் மாதிரியான படங்களை நானே நிறைய பண்ணிட்டேன். மற்றவர்களும் பண்ணிட்டாங்க. அதனால் எப்படிப் பண்ணணும் என்பதை விட, எந்தமாதிரி பண்ணக் கூடாதுன்னு தவிர்க்கவே நிறைய நாளாகிடுச்சு. முழுக் கதையையும் கமல் சாரிடம் சொன்னேன். நான் எப்படி ரசிச்சு எழுதினேனோ அதே ஆர்வத்தில் அவரும் கேட்டார். டிசம்பர் ஷூட்டிங் போறோம். இதைத்தவிர வேறொரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையும் எழுதி வெச்சிருக்கேன். அதை ‘இந்தியன் 2’க்கு அடுத்து பண்ணுவேன்னு நினைக்கிறேன் 

ரஜினி, கமல் இருவரையும் அரசியல் கோணத்தில் யோசிச்சுப் பார்த்ததில்லை என்பதுதான் உண்மை. யார் வந்து நல்லது பண்ணினாலும் நல்ல விஷயம்தான். ஆனா சிக்கலான இன்றைய அரசியல் சூழல்ல யார் வந்தாலும் நல்லது பண்றது ரொம்பக் கஷ்டம்னுதான் நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.