‘ரஜினி அரசியல் சீன் வைத்ததற்கு இது தான் காரணம்’: கோமாளி பட இயக்குநர் விளக்கம்!

 

‘ரஜினி அரசியல் சீன் வைத்ததற்கு இது தான் காரணம்’: கோமாளி பட இயக்குநர் விளக்கம்!

கோமாளி படத்தில் ரஜினி அரசியல் சீன் எதற்காக வைத்தேன் என்று இயக்குநர் கூறியுள்ளார். 

சென்னை: கோமாளி படத்தில் ரஜினி அரசியல் சீன் எதற்காக வைத்தேன் என்று இயக்குநர் கூறியுள்ளார். 

அடங்கு மறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் கோமாளி. இதில் காஜல் அகர்வால் ஹீரோயின்னாக நடிக்க இயக்குநர் பிரதீப் படத்தை இயக்கியுள்ளார். 9வித கேட்பதில் நடித்துள்ள ஜெயம் ரவியின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் நேற்று படத்தின் ட்ரைலர் வெளியானது. மிகவும் நகைச்சுவையாக வெளியான அதில்  குறிப்பிட்ட சீன்னில் அந்த காலம் முதலே ரஜினி அரசியலுக்கு வருவேன் என கூறி வருவதை விமர்சனம் செய்வது போல் இருந்தது. அதை கண்ட ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவேசப்பட்டு இயக்குநரை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தனர்.   

இந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படத்தின் இயக்குநர் பிரதீப், ‘நான் ரஜினியின் தீவிர பேன். லிங்கா படம் வந்த போது அவரது கட் அவுட்டுக்கு நான் பாலாபிஷேகம் செய்தேன். ரஜினி விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு சீனை படத்தில் வைத்தேன்’ என்று கூறியுள்ளார்.