ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது – கருணாநிதி! வைரலாகும் வீடியோ 

 

ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது – கருணாநிதி! வைரலாகும் வீடியோ 

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என தெரிவித்திருந்தார்.

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரஜினியோ நான் செய்தித்தாளில் வந்ததைதான் பேசினேன் இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். பெரியாரை அவமதிப்பு செய்த ரஜினியின் கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, “ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் இருந்தாலும் கூட பொது வாழ்வில் அதிக நாட்டமுடையவர். யாருடைய மனமும் புண்படக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். அப்படி புண்படுத்திவிட்டால் அந்த புண்ணை ஆற்ற வேண்டும் என்பதில் முனைப்புடையவர். அவர் அரசியலுக்கு நேரடியாக வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என இல்லை. அவர் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. வந்தால் வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார். கருணாநிதி பேசும் இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகிவருகிறது.