ரஜினி, அஜித் சாதனையை முறியடித்த தளபதி விஜய்: உற்சாகத்தில் ரசிகர்கள்: எப்படி தெரியுமா?

 

ரஜினி, அஜித் சாதனையை முறியடித்த தளபதி விஜய்: உற்சாகத்தில் ரசிகர்கள்: எப்படி தெரியுமா?

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் திரைப்பட சாதனைகளை தளபதி விஜய்-யின் சர்கார் திரைப்படம் முறியடித்துள்ளது .

சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் திரைப்பட சாதனைகளை தளபதி விஜய்-யின் சர்கார் திரைப்படம் முறியடித்துள்ளது .

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி, ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

ஏற்கனவே கதை விவகாரத்தில் சிக்கி நீதிமன்றம் வரை படம் சென்று வந்திருக்கும் நிலையில், இன்று சர்கார் வெளியாகி  உள்ளதால் முதல் இரண்டு நாட்களுக்கு மட்டும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி  சென்னையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு வெளியானது.

இந்நிலையில் சர்கார் திரைப்படம் முதல் நாளான இன்று 22 திரையரங்குகள், 74 ஸ்கீரின்கள் , 336 காட்சிகள் எனப்  பட்டையை கிளப்பவுள்ளது. ஏற்கனவே வெளியான திரைப்படங்களான கபாலி 283 காட்சிகள்,மெர்சல்  279 காட்சிகள்,தெறி  265 காட்சிகள் விவேகம் 261 காட்சிகள், காலா 253 காட்சிகள் எனத் திரையிடப்பட்ட நிலையில் அந்தச் சாதனைகளை தற்போது  சர்கார்  முறியடித்துள்ளது