ரஜினியை கிண்டல் செய்த இளைஞர் கைது: #நான்தாப்பாபைக்திருடன் ஹேஷ்டாக்கை டிரெண்டாக்கும் ரசிகர்கள்!

 

ரஜினியை கிண்டல் செய்த இளைஞர் கைது: #நான்தாப்பாபைக்திருடன் ஹேஷ்டாக்கை டிரெண்டாக்கும் ரசிகர்கள்!

ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இந்த காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி  பரபரப்பாகப் பேசப்பட்டது

மகா சிவராத்திரியையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிவாலயங்களில்  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் தில்லையம்பலத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில்  நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நடனக்கலைஞர்கள், பரதநாட்டியம் ஆடி  ஈசனை வழிபட்டனர்.   அதேபோல் தஞ்சையில் உள்ள புகழ்பெற்ற பெருவுடையார் கோயிலிலும் மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டது. 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம்  தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ்ராஜ் என்பவர் “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இந்த காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி  பரபரப்பாகப் பேசப்பட்டது.

 


 

துாத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சாம்குமார் என்ற இளைஞரின் வீட்டின் முன்பு இருந்த பைக் திருடி போயுள்ளது. இதுகுறித்து வடபாகம் போலீசார் விசாரணையில், சந்தோஷ்ராஜ் கைதாகியுள்ளார். அவருடன் மணி,  சரவணன் என இருவர் பைக்கை திருடியது தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

tn

இந்நிலையில் ரஜினியை கிண்டல் செய்ததால் சந்தோஷ்ராஜ் மீது கடுமையான கோபத்திலிருந்த ரஜினி ரசிகர்கள் இது தான் கிடைத்த வாய்ப்பு என்று, #நான்தாப்பாபைக்திருடன் என்ற ஹேஷ்டாக்கை  இணையத்தில் வைரலாக்கி  வருகின்றனர். இதுவரை 4,974 பேர் இந்த ஹேஷ்டாக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.