ரஜினியை கண்டிக்கிறேன்… ஓபிஎஸ் ஆவேசம்!

 

ரஜினியை கண்டிக்கிறேன்… ஓபிஎஸ் ஆவேசம்!

அரசுமுறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்கா சென்றிருந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சென்னை திரும்பினார்

சென்னை: அரசுமுறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்கா சென்றிருந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து  செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், ‘ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  குறித்து பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. நாங்கள் எந்த தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்’ என்றார். 

ops

தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது.  தமிழகத்தில் வீட்டுவசதி திட்டத்திற்காக உலக வங்கி ரூ.5,000 கோடி நிதி தர ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார். 

rajini

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்  கமல் ஹாசனின் உங்கள் நான் விழாவில் கலந்துகொண்டு பேசிய போது, எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று கூறியது அதிமுக  வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.