ரஜினியும்… மணியும்… பின்னே போகியும்..! மறக்கடிக்கப்பட்ட பண்பாடு..? 

 

ரஜினியும்… மணியும்… பின்னே போகியும்..! மறக்கடிக்கப்பட்ட பண்பாடு..? 

இன்று போகி, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அழகான செற்றொடர் அமைத்து பழங்குப்பைகளை எரித்துக்கொண்டு இருக்கிறார்கள் தமிழ் மக்கள். ஒரு இருபது வருடம் முன்புவரை தென்தமிழகத்தில் போகிப்பண்டிகை கொண்டாடுவது வேறு விதமாக இருந்தது.

இன்று போகி, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அழகான செற்றொடர் அமைத்து பழங்குப்பைகளை எரித்துக்கொண்டு இருக்கிறார்கள் தமிழ் மக்கள். ஒரு இருபது வருடம் முன்புவரை தென்தமிழகத்தில் போகிப்பண்டிகை கொண்டாடுவது வேறு விதமாக இருந்தது.

சிறார்கள் ஊரைச்சுற்றி பெருகிக் கிடக்கும் ஆவாரம்பூ, சிறுபீளை, இவற்றுடன் வேப்பிலை கொத்துகளும் முதல்நாளே பறித்து வருவார்கள். வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் பீளைப்பூ, சிறிது வேப்பிலை, கொஞ்சம் ஆவாரம் பூ என்று மூன்றையும் சேர்த்து சிறு சிறு கட்டுகளாக கட்டி வைப்பார்கள். பெரியவர்கள், குறிப்பாக ஆண்கள் வீட்டுக்கு வெள்ளையடித்துதர பெண்களும் சிறுமிகளும் சுண்ணாம்பும், காவியும் கொண்டு கோலமிடுவார்கள். திண்ணைகளும் கூட அவர்களின் கைவண்ணத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

painting

ஊரில் உள்ள கோவிகள், குறிப்பாக பிள்ளையார் கோவில்களின் பீடங்களும் சுண்ணாம்பு பூச்சுடன் அழகுபடுத்தபடும். அதன் பிறகு சிறுவர்கள் கட்டித் தயாராக வைத்திருக்கும் சிறுபீளை, வேப்பிலை, ஆவரம்பூ கொத்துகள் வீட்டின் கூரையில் நான்கு பக்கமும் செருகப்படும்.இந்த மார்கழி என்கிற சூனியமாசம் போய் நாளை தை என்கிற மங்களகரமான மாதம் வருவதாலும்,இனி பீடைகள் வீட்டில் நுழையாமல் இருக்கவும் செய்யப்படும் காப்புக்கட்டுதல் இது.

pongal-kaapu-kaatu

வீட்டில் மட்டுமல்ல, நெற்களஞ்சியம்,குதிர்,மாட்டுத் தொழுவம், கிணற்றின் கமலை, மோட்டார் ரூம் எல்லாவற்றுக்கும் காப்புக்கட்டுவார்கள். இதுவெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. இப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை காலையில் குப்பைகள் விளக்குமாறுகள், பாய்கள்,பழைய செருப்புகள் என்று எல்லாக் குப்பைகளையும் போட்டுக் கொளுத்தி தமிழகத்தை புகை மண்டலமாக்குகிறார்கள்.

pogi-fest

இது தமிழர் பண்பாட்டைச் சேர்ந்ததல்ல. மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம் பகுதிகளில் கொண்டாடப்படும் மகரசங்கராந்தியின் போது இப்படிப் பழைய குப்பைகளை கொளுத்துவார்கள். இது வடக்கில் இருந்து தமிழகத்துக்குள் நுழைந்த வேண்டாத வளாகங்களில் ஒன்று.

thalapathy-song

இந்த போகியை தமிழகத்தில் பிரபலபப் படுத்திய பெருமை ரஜினிக்கும்,மணிரத்தினத்துக்குமே சேரும். ‘தளபதி’ படத்தில் இப்படி ஒரு போகி தினத்தில் சிறுவர்கள், சின்ன மேளங்களைத் தட்டியபடி போகி கொண்டாடிக்கொண்டு இருக்க… குட்டி ரஜினியை, அம்மா ஸ்ரீவித்யா ரயிலில் பொதிந்து வைத்ததின் பலனாக இது தமிழகத்தில் பரவி இருக்க வேண்டும். ஒருவகையில் இது சூர்யா என்கிற ரஜினியின் பிறந்த நாள்.