ரஜினியில் அரசியல் அரிதாரத்தை கலாய்த்த கோமாளி ட்ரெய்லர்! 

 

ரஜினியில் அரசியல் அரிதாரத்தை கலாய்த்த கோமாளி ட்ரெய்லர்! 

கோமாளி படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோமாளி படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடங்க மறு படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் கோமாளி. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். 

தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. முதலில் கோமாவிலிருந்த ஜெயம் ரவி அதீத தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்து வியக்கிறார்.. இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அறிவிப்பதை டிவியில் செய்தியாக பார்க்கிறார் ஜெயம் ரவி. அதைப்பார்த்த பின் இது  1996-ம் வருடம். யாரை ஏமாத்துறீங்க என்று கூறுகிறார்.