ரஜினியின் சிட்டி ரோபோவை மிஞ்சும் சுட்டி ரோபோ: டைம் சொன்னா போதும் கரெக்டா ஊட்டி விடும்

 

ரஜினியின் சிட்டி ரோபோவை மிஞ்சும் சுட்டி ரோபோ: டைம் சொன்னா போதும் கரெக்டா ஊட்டி விடும்

ஆஸ்திரேலியாவில் உணவை ஊட்டி விடுவதற்காக புதிய ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உணவை ஊட்டி விடுவதற்காக புதிய ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான வளர்ச்சியின் கண்டுபிடிப்புகளில் ரோபோக்களின் கண்டுபிடிப்பு ஒரு மைல் கல். மனிதர்கள் செய்யும் வேலைகள் ரோபோக்களை வைத்து செய்யப்படுகின்றன. சில வேலைகளுக்கு ரோபோக்களின் பயன்பாடு இன்றியமையாதது. ஆனால், பல்வேறு இடங்களில் ரோபோக்காளால் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருவதுடன், மனிதர்களின் சோம்பேறித்தனமும் அதிகமாகிறது.

தற்போது பெரும்பாலான துறைகளில் ரோபோக்களின் பயன்பாடு இருந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் அவற்றின் உபயோகம் இன்னும் அதிகமாகலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்  உணவை ஊட்டி விடுவதற்காக புதிய ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.  இடுப்போடு கட்டிக்கொள்ளப்படும் இந்த ரோபோ நமக்கு உணவூட்டும் நேரத்தை தெரிவித்துவிட்டால் சரியான நேரத்திற்கு உணவை ஊட்டிவிடும். இந்த ரோபோவுடன் இணைக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனில் இயங்கும் facial recognition மூலம் இயங்கும்படி இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்து.

இதன் மூலம் வேலை பார்த்துக் கொண்டே சாப்பிட முடியும் என்பதால் நேரம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.