ரஜினிக்கு வயதாகிவிட்டதால் அதை செய்ய முடியாது: ராஜேந்திர பாலாஜி தடாலடி

 

ரஜினிக்கு வயதாகிவிட்டதால் அதை செய்ய முடியாது: ராஜேந்திர பாலாஜி தடாலடி

ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

விருதுநகர்: ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர், அவருடைய வெகுளியான குணத்திற்கு அவர் அரசியலில் இறங்குவது சந்தேகம் தான். அது மட்டுமில்லாமல் ரஜினிக்கு 70 வயதாகிவிட்டது. இதற்கு மேல் அவரால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வது, மக்களை நேரில் சந்திப்பது, தேர்தலில் வெற்றி பெறுவது என்பதெல்லாம் முடியாத காரியம். ஒரு வேளை 1996-ம் ஆண்டே ரஜினி கட்சித் தொடங்கி இருந்தால் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருக்கிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் என்ன என்பதை மக்கள் உணர்த்துவார்கள். ஒரு தேர்தலுக்குப் பிறகு கமல் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்பது கருத்துக்கணிப்பு முடிவல்ல, இது கருத்துத் திணிப்பு என்றார்.