ரஜினிக்கு நன்றி தெரிவித்து மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!

 

ரஜினிக்கு நன்றி தெரிவித்து மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!

ரஜினிக்கு நன்றி தெரிவித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

சென்னை: ரஜினிக்கு நன்றி தெரிவித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மிசைய முறுக்கு போன்ற சில படங்களில் நடித்திருந்தார். அது போகக் கன்னட படங்கள் மற்றும் சில தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் உடல் நலக் குறைவு காரணமாகப் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு பணம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தோடு தோழியின் வீட்டில் இருப்பதாகத் தெரிவித்தார். அந்த சம்பவம் தமிழ்த் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் தான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் ரஜினி சார் தனக்கு உதவ வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

தற்போது மீண்டும் மற்றொரு வீடியோ ஒன்றை நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில், ‘ரஜினிகாந்த்துடன் தொலைப்பேசியில் உரையாடினேன். அவர் என்னுடைய கஷ்டங்களைப் பொறுமையாகக் கேட்டு  பயப்பட வேண்டாம் என ஆதரவான வார்த்தைகள் கூறியிருந்தார். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.