ரஜினிக்கு இலங்கை விசா மறுக்கவில்லை… நமல் ராஜபச்சே விளக்கம்!

 

ரஜினிக்கு இலங்கை விசா மறுக்கவில்லை… நமல் ராஜபச்சே விளக்கம்!

இலங்கைக்கு செல்ல ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு செல்ல ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

rajapaksa

சில தினங்களுக்கு முன்பு இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னை வந்து ரஜினியை சந்தித்தார். அப்போது இலங்கைக்கு வர வேண்டும் என்று அவர் ரஜினிக்கு அழைப்புவிடுத்ததாக செய்திகள் வெளியாகின. சில நாட்களிலேயே இலங்கைக்கு வர ரஜினிக்கு அனுமதி மறுப்பு, வீசா வழங்க இலங்கை அரசு மறுத்துவிட்டது என்று செய்தி வெளியானது. 

rajini

இந்த நிலையில், “ரஜினியை இலங்கைக்கு வரும்படி நான் எந்த ஒரு அழைப்பையும் விடுக்கவில்லை” என்று விக்னேஷ்வரன் தெரிவித்தார். தற்போது, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபச்சேவின் மகன் நமல், “ரஜினிக்கு இலங்கைக்கு வர வீசா மறுக்கப்பட்டது என்று வெளியான தகவல் தவறானது. இது வெறும் வதந்தி. அவர் இலங்கைக்கு வர எந்த தடையும் இல்லை. அவரை வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளார்.