ரஜினிகாந்த் 166 பட புகைப்படம் லீக்: அதிர்ச்சியில் படக்குழு! 

 

ரஜினிகாந்த் 166 பட புகைப்படம் லீக்: அதிர்ச்சியில் படக்குழு! 

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றியானது. அதையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்திரமுகி படத்துக்கு பின் நடிகை நயன்தாரா ஜோடியாக நடிக்கவிருக்கிறார். 

chandramuki

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் மும்பையில் தொடங்கி பெரும்பாலான காட்சிகளை மும்பையிலேயே படமாக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

rajini

இந்நிலையில் இப்படத்துக்கான போட்டோஷுட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்புகைப்படத்தில் ரஜினி காவல்துறை உடையின் மீது, ப்ரவுன் கலர் கோட் போட்டுக் கொண்டு கையில் கம்பியுடன் அமர்ந்திருப்பது போல் உள்ளது. இதன்மூலம் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. 

இதையும் படிங்க: அடுத்தவர் செய்த துரோகத்தால் குற்றவாளியாக நிற்கிறேன்! நடிகர் மோகன்பாபு ஆதங்கம்!?