ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எப்போ தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எப்போ தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது பிக் பாஸ். கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதையடுத்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. 

இரண்டு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் புரொமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற செய்தது. 

அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த சீசனில் 60 கேமராக்களுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் வசிக்கப்போகும் அந்த 15 போட்டியாளர்கள் யார் என்பது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.