“ரகசியமாக கஞ்சா விற்பனை”.. போலீசாரை கத்தியால் தாக்கி தப்பிக்க முயன்ற வியாபாரி: மடக்கி பிடித்த தனிப்படை!

 

“ரகசியமாக கஞ்சா விற்பனை”.. போலீசாரை கத்தியால் தாக்கி தப்பிக்க முயன்ற வியாபாரி: மடக்கி பிடித்த தனிப்படை!

மறைமுகமாக அங்கு கஞ்சா விற்கப்படுவதை அறிந்த போலீசார், அந்த நபர்களை தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் கஞ்சா விற்பனை அதிகமாகிக் கொண்டே வந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்தின் அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கின் காரணமாக அங்கு, மீண்டும் கஞ்சா விற்பனை தொடங்கியுள்ளது. சரக்கு இல்லாமல் தவித்து வரும் ஆண்கள், கள்ளச்சாராயம் விற்பதோடு கஞ்சா விற்பனையும் செய்து வருகின்றனர். 

ttn

மறைமுகமாக அங்கு கஞ்சா விற்கப்படுவதை அறிந்த போலீசார், அந்த நபர்களை தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளத்தில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடைப்படையில் அந்த பகுதிக்கு இன்று காலை போலீசார் விரைந்துள்ளனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த இளைஞர் அஜித்(30)ஐ போலீசார் கைது செய்துள்ளனர். 

ttn

போலீசார் வந்ததை பார்த்தவுடன் மற்ற இரண்டு பேர் அங்கிருந்து எஸ்கேப் ஆன நிலையில், அஜித் மட்டும் சிக்கிக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அஜித், தனிப்படை தலைமை காவலர்கள் வீரமணி மற்றும் சிவாஜியை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்றிருக்கிறார். ஆனால், தனிப்படை காவலர்கள் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த இரண்டு காவலர்களையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தப்பியோடிய இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், கஞ்சா வியாபாரி அஜித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.