ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 

ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது தான் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுடெல்லி: ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது தான் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்திடம் 36 ரஃபேல் ரக அதிநவீன போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. சுமார் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்புள்ளதாகக் கணக்கிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

sc

இந்த ஊழல் குறித்து சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் துவக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. மத்திய அரசிடம் இருந்து இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு  வழங்கியுள்ளது. அதில், ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான். அதனால் ரஃபேல் போர் விமானஒப்பந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது. சட்ட ஆய்வு ஒவ்வொரு விஷயத்திலும் மாறுபடும்.சில விஷயங்களுக்காக இதில் தலையிட்டோம் என்று கூறி யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.