ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்!

 

ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்!

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது

புதுதில்லி: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணியை மேற்கொள்கிறது.

rafale

ஆனால், பிரான்ஸ் – இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர் குற்றச் சாட்டுகளை முன் வைத்து வருகிறார். விமானம் வாங்குவதற்கு இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம், டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்சை, இந்த ஒப்பந்தத்தில் சேர்த்தது தவறு என ராகுல் கூறி வருகிறார்.

modi rafale deal

ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. எனினும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

rahulgandhi

இதனிடையே, ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை என கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் சார்பில் சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வழங்குகிறது.

இதையும் வாசிங்க

மாட்டிறைச்சி விற்றதாக இஸ்லாமிய முதியவரை தாக்கிய கொடூர கும்பல்; அசாமில் அதிர்ச்சி!