யோனோ ஆப்….சுமார் 4.3 கோடி டவுன்லோடுகள் – எஸ்.பி.ஐ வங்கி தகவல்

 

யோனோ ஆப்….சுமார் 4.3 கோடி டவுன்லோடுகள் – எஸ்.பி.ஐ வங்கி தகவல்

எஸ்.பி.ஐ வங்கிக்கு சொந்தமான யோனோ ஆப் இதுவரை சுமார் 4.3 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது.

டெல்லி: எஸ்.பி.ஐ வங்கிக்கு சொந்தமான யோனோ ஆப் இதுவரை சுமார் 4.3 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி 2 ஆண்டுகளுக்கு முன்பு யோனோ ஆப்-ஐ அறிமுகம் செய்தது. அது இதுவரை சுமார் 4.3 கோடி டவுன்லோடுகளை பிளே ஸ்டோரில் கடந்திருப்பதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் சேவை தளமான யோனோ ஆப்-க்கு எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் அதிக வரவேற்பு அளித்துள்ளனர்.

ttn

இந்த யோனோ ஆப் மூலம் வங்கி, ஷாப்பிங், முதலீட்டு தேவை என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். மேலும் இதன் வாயிலாக சுமார் 68 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தினமும் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் யோனோ ஆப்-ஐ பயன்படுத்துவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.