யோகிபாபுவுக்கு ஓபனிங் சாங்…பட்டையை கிளப்பும் ‘சூப்பர் சிங்கர்’ பூவையார்

 

யோகிபாபுவுக்கு ஓபனிங்  சாங்…பட்டையை கிளப்பும்  ‘சூப்பர் சிங்கர்’ பூவையார்

KPY தீனா, நந்தா சரவணன், மயில்சாமி,சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள்.

இயக்குநர் கிருஷ்ணா சாய் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம்  50/50. திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாகத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், KPY தீனா, நந்தா சரவணன், மயில்சாமி,சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள்.

ttn

தரண் இசையமைத்து இப்படத்தைத்  தயாரிப்பாளர் வி.என்.ஆர் தயாரித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

tn

இந்நிலையில் 50/50 படத்தில், யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை சூப்பர் சிங்கர்  பூவையார் பாடியுள்ளார்.  படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ள நிலையில் கோலமாவு கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. 

ttn

இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகும் என்று  தயாரிப்பு நிறுவனமான லிபி சினி கிராப்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.