யோகிபாபுக்கும் எனக்கும் திருமணமா? பப்ளிசிட்டிக்காக வேலை பார்த்த நடிகை!

 

யோகிபாபுக்கும் எனக்கும்  திருமணமா? பப்ளிசிட்டிக்காக வேலை பார்த்த நடிகை!

இவரது நடிப்பில் வெளியான தர்ம பிரபு, கூர்கா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சின்னதிரை மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். குறிப்பாக அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்துள்ள அவர் தனது கடின உழைப்பால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பாரில் இணைந்துள்ளார். இவர் சமீப காலமாக ஹீரோவாகவும் பல படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான தர்ம பிரபு, கூர்கா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

yogi

கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகி பாபு திருமண கோலத்தில் நடிகை சபீதா ராயுடன் இருப்பது போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைக்கண்ட நெட்டிசன்கள் யோகிபாபுவுக்கு இவ்வளவு அழகான மனைவியா? எப்போ சார் கல்யாணம் ஆச்சு..சொல்லவே இல்ல என்பது போல கமண்ட்டுகளை  தெறிக்கவிட்டு வந்தனர்.

yogi

இதைக்கண்ட  அதிர்ச்சியடைந்த யோகி பாபு தனது  டிவிட்டர் பக்கத்தில், ‘என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி’ என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் நடிகை சபிதா ராய்  இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நானும் யோகிபாபுவும் திருமணம் செய்து கொள்வதாக ஒருபோட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. ‘உண்மையில் அது வெறும் வதந்தி தான். அவருக்கும் எனக்கும் சக நடிகை என்பதைத் தாண்டி எனக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமில்லை.  நல்ல மனிதர் மற்றும் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான். நல்ல வேலையாக அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்’ என்றார். இருப்பினும் யோகிபாபுவின் ரசிகர்களோ பப்ளிசிட்டிக்காக தானே இப்படி போட்டோவை லீக் பண்ணீங்க என்று சபிதாவை திட்டி வருகின்றனர்.