யெஸ் வங்கியை மீட்க கோடிகளை கொட்டிக்கொடுக்கும் பிற வங்கிகள்

 

யெஸ் வங்கியை மீட்க கோடிகளை கொட்டிக்கொடுக்கும் பிற வங்கிகள்

தனியார் வங்கியான யெஸ் பேங்கின் மோசமான நிதி நிலைமை காரணம் காட்டி ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அந்த வங்கிக்கு தடை விதித்தது.

தனியார் வங்கியான யெஸ் பேங்கின் மோசமான நிதி நிலைமை காரணம் காட்டி ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அந்த வங்கிக்கு தடை விதித்தது. மேலும் யெஸ் பேங்கின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. யெஸ் பேங்க் விவகாரத்தில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, மகாராஷ்டிரா மாநில அரசும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

yes bank

இந்நிலையில் யெஸ் வங்கி மறுகட்டமைப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். யெஸ் வங்கியின் 49 சதவீத ஈக்விட்டி பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாங்குகிறது என்றும், மற்ற முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் யெஸ் வங்கியை மீட்டெடுக்க எஸ்.பி.ஐ வங்கி 7250 கோடி ரூபாயையும், ஐசிஐடிஐ வங்கி, எஸ்.டி.எஃப்.சி வங்கி தலா 1000 கோடி ரூபாயையும், ஆக்சிஸ் வங்கி 600 கோடி ரூபாயையும், கோட்டக் மகேந்திரா வங்கி 500 கோடி ரூபாயையும் முதலீடு செய்யவுள்ளன.