யெஸ் வங்கியின் அந்த வங்கிதான் காரணம் – நிர்மலா சீதாராமன்

 

யெஸ் வங்கியின் அந்த வங்கிதான் காரணம் – நிர்மலா சீதாராமன்

வாராக் கடன் காரணமாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் எஸ்வங்கியை ரிவர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது

வாராக் கடன் காரணமாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் எஸ்வங்கியை ரிசர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. சமீப காலமாக வங்கிகள் திவாலாகும் நிலைக்கு செல்வதும், அதை தடுக்க ரிவர்வ் வங்கி நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அடுத்த 30 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்று ரிவர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மூலமாக இனி யெஸ் வங்கி எந்த முதலீடு தொடர்பான நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது.

yes bank

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன. வங்கி மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுத்துவருகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து யெஸ் வங்கியின் நிலைபாட்டை, ஆர்பிஐ கண்காணித்து வருகிறது. சொத்துக்களை மீறி யெஸ் வங்கி, தவறான வகையில் கடன்களை வழங்கியுள்ளது. யெஸ் வங்கியின் மறுசீரமைப்பு திட்டத்தை ஏப்ரல் 3ம் தேதிக்குள் நடைமுறைபடுத்த வாய்ப்பு. யெஸ் வங்கியின் கணக்குகளை சீர்படுத்தும் பணி 2018-லேயே தொடங்கிவிட்டது. 2019-ஆம் ஆண்டு யெஸ் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி” என தெரிவித்தார்.