யூ ட்யூப் வீடியோக்களைப் பார்த்து, கள்ள நோட்டு அச்சடித்த பட்டதாரி வாலிபர்கள்!  நாடு போற போக்கப் பார்த்தா…!

 

யூ ட்யூப் வீடியோக்களைப் பார்த்து, கள்ள நோட்டு அச்சடித்த பட்டதாரி வாலிபர்கள்!  நாடு போற போக்கப் பார்த்தா…!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக கள்ள நோட்டுக்களை பயன்படுத்திய 2 பட்டதாரிகளை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக கள்ள நோட்டுக்களை பயன்படுத்திய 2 பட்டதாரிகளை போலீசார் கைது செய்தனர். யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கள்ள நோட்டுக்களை இவர்கள் தயாரித்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கர்நாடாகா மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர்கள்  சேத்தன் கவுடா, அர்பிதா நவலே. பி.பி.எம்  பட்டதாரிகளான இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 

உடுப்பியில், கெடின்ஜே கிராமத்தில் இருக்கும் ஒரு மருந்துக் கடைக்கு கடந்த புதன்கிழமையன்று காலை 10 மணியளவில் இருவரும் சென்று, அங்குள்ள கடைக்காரரிடம் போலியாக இவர்கள் தயாரித்த 200 ரூபாய் நோட்டைக் கொடுத்து மருந்துகளை வாங்கி விட்டுச் சென்றிருக்கின்றனர்.​​போலீசார் கைது

இவர்களின் நடவடிக்கையை பார்த்த கடைக்காரர் சுதீர் ஷெட்டி, இவர்கள் கொடுத்த 200 ரூபாய் நோட்டின் மீது சந்தேகப்பட்டு, உடனடியாக அருகில் இருந்த வங்கிக்குச் சென்று அந்த 200 ரூபாய் நோட்டை சரிப்பார்த்தார். 

அதன் பின் அவர்கள் இருவரும் கொடுத்துச் சென்றது கள்ள நோட்டு என்று தெரிய வந்துள்ளது. உடனே அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். 

இதனை விசாரித்த காவல் துறையினர் அந்த இரு பட்டதாரிகளையும், அன்று மாலை 5 மணிக்கு கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் யூடியூபில் டுடோரியல் வீடியோக்களைப் பார்த்து கள்ள நோட்டுக்களை எப்படி அச்சடிப்பது என்பதைக் கற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்கள். 

அவர்கள் கள்ள நோட்டுக்களை அச்சடிக்கப் பயன்படுத்திய போலி நாணயத் தாள்கள், அச்சுப்பொறி மற்றும் எஸ்யூவி வாகனம் போன்ற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..