யூரினை சேமியுங்கள் யூரியா இறக்குமதிக்கு முடிவு கட்டுங்கள்: நிதின் கட்கரி யோசனை

 

யூரினை சேமியுங்கள் யூரியா இறக்குமதிக்கு முடிவு கட்டுங்கள்: நிதின் கட்கரி யோசனை

தேசம் முழுவதும் சிறுநீரை சேமித்தால் உரம் தயாரிப்பில் பயன்படும் யூரியாவுக்கு முடிவு கட்டலாம் என்ற யோசனையை வழங்கியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தேசம் முழுவதும் சிறுநீரை சேமித்தால் உரம் தயாரிப்பில் பயன்படும் யூரியாவுக்கு முடிவு கட்டலாம் என்ற யோசனையை வழங்கியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

நாக்பூர் நகராட்சி சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்கரி, மனித சிறுநீரைச் சேமித்து உரத்துக்கு பயன்படுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தார். இதுகுறித்து அவர், யூரினில் நைட்ரஜனும் அம்மோனியம் சல்பேட்டும் உள்ளது. இதன்மூலம் எரிபொருட்களை தயாரிக்க முடியும். விமான நிலையங்களின் யூரினை சேமிக்க சொல்லியிருக்கிறேன். விவசாயத்துக்காக யூரியா இறக்குமதி செய்யும் நாம், யூரினை சேமித்தால் அந்த அவசியமே இருக்காது என்று பேசினார்.

சில ஆண்டுகளுக்கு முன் அவர், தன்னுடைய சிறுநீரை சேமித்து தோட்டத்தில் பயன்படுத்தியதில் நல்ல ரிசல்ட் கிடைத்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.