யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடுகிறார் சின்மயி!

யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடுகிறார் சின்மயி!

மீடூ விவகாரத்தை பற்றி எப்போது  சின்மயி பேசத் தொடங்கினாரோ அன்றிலிருந்து அவருக்கு தொடங்கியது  சிக்கல்..! எந்தப் பக்கம் போனாலும் வேலை செய்ய விடாமல் ஆளாளுக்கு அணை கட்டினார்கள்.அதில் உச்சகட்டமாக, யூனியன் சந்தாக் கட்டவில்லை என்று காரணம் காட்டி சின்மயியை  திரைப்பட டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினார்கள்.

chinmayi

இதற்கெல்லாம் காரணம் நடிகர் ராதாரவிதான் என சின்மயி நேரடியாகக் குற்றம் சாட்டினார்.அதைத் தொடர்ந்து ராதாரவி தரப்பும் சின்மயி தரப்பும் பொது வெளியில் ஒருவர் மீது ஒருவர் சேற்றை  வாரி இறைத்துக் கொண்டனர் , அதில் உச்சகட்டமாக ராதாரவி திரைப்பட டைட்டில் கார்டுகளில் தன்  பெயருக்கு முன்னால் “டத்தோ” என்று போட்டுக்கொள்வதைச் சுட்டிக்காட்டிய சின்மயி மலேசிய அரசு ராதாரவிக்கு டத்தோ வழங்கியதாக சொல்லிக் கொள்வது பொய் என்று அந்நாட்டு அரசின் கடிதம் பெற்று ட்விட்டரில் வெளியிட்டார்.

chinmayi

அதே சமையத்தில் பொது மேடையில் நடிகை நயன்தாரா குறித்து நாகரீகக் குறைவாகப் பேசியதாக ராதாரவி  திமுக-வில் இருந்து நீக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து ராதாரவி பிஜேபியில் இணைந்தார்.அப்போதும் விடாத சின்மயி பிஜேபியின் மகளிர் நலத்துறை அமைச்சரான ஸ்மிர்த்தி இரானியிடம் ராதாரவி குறித்து புகார் அளித்து பரபரப்பு கிளப்பினார்.

சின்மயி தன்னை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அந்த நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பை பெற்றுவிட்டார். இந்த நிலையில் வருகிற ஃபிரவரி 15-ம் தேதி டப்பிங் யூனியன் தேர்தல் நடக்க இருக்கிறது. அதில்,ராதாரவியை எதிர்த்து சின்மயி போட்டியிட முடிவுசெய்து இருக்கிறார். ஆனால்,யூனியனின் வாக்குரிமை உள்ளோர் பட்டியலில் சின்மயி பெயர் இல்லை.

chinmayi

இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு பலமுறை எழுதியும் பதில் இல்லையாம். அதைத்தொடர்ந்து, சின்மயி வேட்புமனு தாக்கல் செய்வது என்றும்,அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனில் தேர்தல் நிறுத்தும் அதிகாரி மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்வது என்றும் சின்மயி தரப்பு முடிவு செய்து இருக்கிறதாம். இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி ஃபிப்ரவரி 15-ல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெறுமா என்கிற ஐயம் எழுந்து இருக்கிறது.