யூடியூப் வீடியோ மூலம் ரூ.185 கோடி சம்பாதித்த சிறுவன்!

 

யூடியூப் வீடியோ மூலம் ரூ.185 கோடி சம்பாதித்த சிறுவன்!

இந்த ஆண்டில் யூடியூப் வீடியோ மூலம் மட்டும் ரூ.185 கோடி ரூபாயை அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் ரியான் காஜி சம்பாதித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை ரிவ்யூ செய்தே பல கோடிகளை சம்பாதித்துள்ளான் அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் ரியான் காஜி. எட்டு வயதான காஜி 2015ம் ஆண்டு ரியான்ஸ் வேர்ல்ட் என்ற பெயரில் யூடியூப் வீடியோ சேனலை தொடங்கினான். புதிதாக அறிமுகம் ஆகும் விளையாட்டுப் பொருட்களை இந்த சிறுவன் விளையாடி அது பற்றிய தன்னுடைய அனுபவங்களை ஷேர் செய்வான். இதை வீடியோவாக இந்த சேனலில் பதிவேற்றம் செய்துவந்துள்ளனர். இந்த வீடியோவை உலகம் முழுக்க உள்ள மக்கள் பார்த்து வருகின்றனர். இதனால், சிறுவனுக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்க ஆரம்பித்தது.

இந்த ஆண்டில் யூடியூப் வீடியோ மூலம் மட்டும் ரூ.185 கோடி ரூபாயை அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் ரியான் காஜி சம்பாதித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை ரிவ்யூ செய்தே பல கோடிகளை சம்பாதித்துள்ளான் அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் ரியான் காஜி. எட்டு வயதான காஜி 2015ம் ஆண்டு ரியான்ஸ் வேர்ல்ட் என்ற பெயரில் யூடியூப் வீடியோ சேனலை தொடங்கினான்

ryan

. புதிதாக அறிமுகம் ஆகும் விளையாட்டுப் பொருட்களை இந்த சிறுவன் விளையாடி அது பற்றிய தன்னுடைய அனுபவங்களை ஷேர் செய்வான். இதை வீடியோவாக இந்த சேனலில் பதிவேற்றம் செய்துவந்துள்ளனர். இந்த வீடியோவை உலகம் முழுக்க உள்ள மக்கள் பார்த்து வருகின்றனர். இதனால், சிறுவனுக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்க ஆரம்பித்தது.

ryan

இந்த நிலையில் யூடியூப் மூலம் பணம் ஈட்டியவர்கள் பட்டியலை பிரபல ஃபேர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், ரியான் காஜி முதல் இடத்தைப் பிடித்துள்ளான். இந்த ஆண்டு இதுவரை அவன் ரூ.185 கோடி சம்பாதித்துள்ளான் என்றும் கடந்த ஆண்டு அது 2.2 கோடி அமெரிக்க டாலராக இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.