யூடியூப்பில் சாதனை படைத்தது பிரபுதேவாவின் குலேபா பாடல் 

 

யூடியூப்பில் சாதனை படைத்தது பிரபுதேவாவின் குலேபா பாடல் 

நடிகர் பிரபுதேவாவின் குலேப பாடல் யூடியூப்பில் 100மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கண்டு சாதனை படைத்துள்ளது.

சென்னை: நடிகர் பிரபுதேவாவின் குலேப பாடல் யூடியூப்பில் 100மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கண்டு சாதனை படைத்துள்ளது.

பிரபுதேவாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் குலேபகாவலி. கல்யாண் இயக்கத்தில் கொட்டப்பாடி இராஜேஸ் தயாரித்துள்ளார் இப்படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் விவேக்-மெர்வின் இசையிலும் விஜய் வேல்குட்டி படத்தொகுப்பிலும் ஆர். எஸ். ஆனந்தகுமார் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள குலேப பாடல் யூடியூப்பில் 100மில்லியன் பார்வையாளர்கள் மேல் கண்டு சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே யூடியூப்பில் தனுஷின் ரவுடி பேபி பாடல் 300 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு சாதனை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.