யுனெஸ்கோ லிஸ்டில் தமிழகத்தின் டாப் சுற்றுலா தளங்கள்!

 

யுனெஸ்கோ லிஸ்டில் தமிழகத்தின் டாப் சுற்றுலா தளங்கள்!

ஆந்திர மக்களுக்கு கோடிகளைக் குவிக்கும் திருப்பதி மலை இருக்கிறது.. கேரள மக்களுக்கு அப்படி சொல்லிக் கொள்ள சபரிமலையும், குருவாயூர் கோவிலும் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் வருமானத்தை அள்ளித் தருகிற மாதிரியான ஆன்மிக தலங்களோ, சுற்றுலா இடங்களோ இல்லை என்று தான் இன்று வரையில் நாம் பேசி வருகிறோம். ஆனால் உண்மையில், இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகள் விசிட் அடிக்கிற இடமாக திகழ்வது நம் தமிழ்நாடு தான்!

tour

நீங்கள் நினைக்கிற மாதிரி கோங்குரா சட்னியும், அவித்த மீனும், கப்பைக் கஞ்சியும் வருகிற சுற்றுலா பயணிகளை ஈர்த்தாலும், அவர்கள் விரும்பி வருகிற ஆன்மிக, பாரம்பரிய விஷயங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகமிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், தமிழகத்தில் உள்ள வரலாற்று சிற்பங்களும், கோவில்களும் தான். நாம் தான் அவற்றை இன்னமும் சரியான முறையில் பராமரிக்க தவறுகிறோம்.

உலகின் பாரம்பரியமான தலங்கள் என்று இந்தியாவில் 29 இடங்களை யுனெஸ்கோ தேர்வு செய்து வெளியிட்டது. அந்த பட்டியலில் நான்கு இடங்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளன. 

யுனெஸ்கோ பட்டியலில் உள்ள தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்களையும், தமிழக்த்தின் பிற புகழ்பெற்ற சுற்றுலா தளங்களைப் பற்றியும்  பார்ப்போம்.
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் சின்னம் தஞ்சாவூரில் உள்ள பிரகதீசுவரர் கோவில் தான். 

brihadisvara temple

தஞ்சாவூரிலுள்ள காவரி ஆற்றின் தென்கரையில் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை தஞ்சைப் பெரிய கோயில் என்றும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும்  அழைக்கின்றனர். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலின் கட்டிகலை தமிழர்களின்  சிறப்பு மிக்க கட்டிடக் கலைக்கு சான்றாக இன்றும்  விளங்குகிறது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் மாமன்னர் முதலாம் ராஜ ராஜ சோழன் இக்கோவிலை கட்டினார்.  இந்த கோவில் கிபி 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.  இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் புதுமை மாறமால் காட்சி அளிக்கின்றது.

temple

2.ஐராவதேசுவரர் கோயில்

ஐராவதேசுவரர் கோயில் தாராசுரம் நகரில் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் தஞ்சாவூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இரண்டாம் ராஜராஜ சோழரால் கட்டப்பட்டது. 

gangaikonda cholapuram

3.கங்கைகொண்ட சோழபுரம்:

கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்படும் பிரஹதீஸ்வரர் கோவில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை கட்டினான். 

mahabalipuram

4.மகாபலிபுரம் :

மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் தமிழ் நாட்டில் காஞ்சிபுர மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தமிழ் நாட்டில் முதல் கட்டுமான கோவிலாகும். தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றாகும். இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. 

மாமல்லபுரம் ஏழு கோவில்களின் நிலம் என்று செல்லப்பெயர் பெற்றது.  மற்ற ஆறு கோயில்கள் சோழமண்டல  கடற்கரையில் மூழ்கியுள்ளன. மாமல்லபுரத்தில் ஏழு கோவில் அமைப்புகள் இருந்தன என்ற புராதனச் செய்தி முற்றிலும் உண்மையே என்று கூற முடியாவிட்டாலும், மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் விளைவாக, மாமல்லபுரம் பகுதியில் மாபெரும் கோவில் வளாகம் இருந்தது என்றும் கடல்கோள் காரணமாக அது பெரும்பாலும் மறைந்துவிட, இன்று ஒருசில கட்டடங்களே எஞ்சியுள்ளன என்பதும் தெளிவாகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழமண்டல கடற்கரை பகுதியில் உள்ள மலை உச்சியில் மாமல்லபுர குகைக் கோயில்கள் அமைந்துள்ளது. இந்த கோவிலை மண்டபங்கள் அல்லது குடவரை குகை கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன.

குகைகளின் சுவர்களில் செதுக்கப்பட்ட சுவாரஸ்யமான சிற்பம், பாசுரங்கள், துர்க்கை என்று இன்றும் பொலிவுடன் இருக்கிறது. 1984 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ உலக மரபுரிமை தளமாக மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழுவில் ஒன்றாகும்.

niligiri rail

5.நீலகிரி மலை ரயில்:

1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நீலகிரி மலைக்கு செல்லும் ரயில் பாதையை அமைத்தனர். சுமார் 1,000 மில்லிமீட்டர்  அளவு கொண்ட குறுகியப் பாதை வகை இரயில் போக்குவரத்து இயக்கப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒரே பற்சக்கர இருப்புப்பாதை  கொண்ட தொடர்வண்டி நீலகிரி மலை தொடர்வண்டி மட்டுமே. ஆசியாவில் மிகக் கடுமையான சரிவு பாதையாக நீலகிரி ரயில் பயணம் கருதப்படுகிறது.
2005 இல் டார்ஜிலிங் இமாலயன் இரயில்வேயுடன்,  நீலகிரி மலை இரயில்வேவையும் உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 
 – உமாமகேஸ்வரி (செங்காந்தாள்)