யுகாதி ஸ்பெஷல் பச்சடி.

 

யுகாதி ஸ்பெஷல் பச்சடி.

யுகாதி இளவேனிற்காலம் பிறப்பதைக் குறிக்கும் பண்டிகை.இளவேனிலை முதலில் வரவேற்பவை  வேப்பம் பூக்கள்தான்.யுகாதி விழாவின் போது இடப்படும் படையலில் முதல் இடம் இந்த பச்சடிக்குத்தான்.அறுசுவையும் கலந்த இந்தப் பச்சடியை அடுப்பை பற்றவைக்காமல் செய்கிறார்கள்.

ugadi pachadi

தேவையான பொருட்கள்:

வேப்பம் பூக்கள்  – கசப்பு
மாங்காய் – துவர்ப்பு

உப்பு

பச்சை மிளகாய் – காரம்

வெல்லம் – இனிப்பு

புளி சாறு – புளிப்பு

புத்தம் புதிய வேப்பம் பூக்கள் 
 ஒரு டேபிள் ஸ்பூன்,கழுவி வைக்கவும்.

மாங்காய்- முற்றாத சிறிய மாங்காய் ஒன்றின் தோலை சீவி விட்டு,உள்ளிருக்கும் கொட்டையை அகற்றிவிட்டு,காயை பொடிப்பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

புளியை குறைவகத் தண்ணீர் விட்டு ஊறவைத்து திக்காக கரைத்தது 2 

டேபிள் ஸ்பூன்.

 மெலிதாகத் துருவிய வெல்லம்
 2 டேபிள் ஸ்பூன்

உப்பு

பச்சை மிளகாய் 2
பொடிப்பொடியாக வெட்டிக்கொள்ளவும்

இப்போது ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி,அதில் வெல்லம்,பச்சை மிளகாய்,மாங்காய்,உப்பு ,வேப்பம்பூ ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து கலந்தால் யுகாதி பச்சடி தயார்.

காரம்,இனிப்பு,உப்பு,புளிப்பு,துவர்ப்பு,கசப்பு என அறுசுவையும் கொண்டதாக இது கருதப்படுவதால் யுகாதி அன்று படைக்கப் படுகிறது.