யார் இந்த சுஷ்மா! 25 வயதில் அமைச்சர்… 46 வயதில் முதலமைச்சர்!!

 

யார் இந்த சுஷ்மா! 25 வயதில் அமைச்சர்… 46 வயதில் முதலமைச்சர்!!

1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. வழக்கறிஞரான சுஷ்மா சுவராஜ் பா.ஜ.கவின் டெல்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார்.

1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. வழக்கறிஞரான சுஷ்மா சுவராஜ் பா.ஜ.கவின் டெல்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார்.

1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார். 1996 ஆம் ஆண்டு இந்திய 11ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒளிப்பரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவு என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார். கடந்த 2016 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி முதல் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
இந்தியாவின் 15 ஆவது மக்களவையுன் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். மேலும் டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தின் போது மக்களவையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராஜ்நாத்சிங்கும் அவருடன் சென்றிருந்ததால் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி  முதல் நவம்பர் 23 ஆம் தேதி வரை இந்தியாவின் பொறுப்பு பிரதமராகவும் சுஷ்மா  பதவி வகித்தார்.

ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிய இவர், ட்வீட் மூலம் தமக்கு வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இருக்கிறார். பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.  வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் இந்த முறை உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார். இன்று இரவு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார். சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுஷல் உச்சநீதிமன்ற வழக்கறிஞராவர். மேலும் மிசோரம் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.