யாருக்கெல்லாம் முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும்?

 

யாருக்கெல்லாம் முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும்?

உடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் போக முடியாது என்பதால் ஒரு பின்னடைவை சந்திப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 
27-09-2019 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 9 மணி முதல் 10 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம் 
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம் 
மாலை 3 மணி முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம்  அவிட்டம், சதயம்
பரிகாரம் வெல்லம்
மேஷம் 
இன்று உங்கள் கிரக நிலைகளின் படி முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்து விடும். குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புறக்கணித்தால் மோசமான விளைவு ஏற்படும். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். 
அதிர்ஷ்ட எண்: 7
ரிஷபம் 
நீங்கள் இன்று செய்யும் சில மாறுதல்கள் நிச்சயமாக உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும். இன்று நிலம், ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தலாம். போட்டி வரும்போது வேலைக்கான அட்டவணை கடுமையாக இருக்கும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். 
அதிர்ஷ்ட எண்: 6
மிதுனம் 
நீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்த மனதுடன் கூடிய செயல்களால் இவற்றில் நீங்கள் வெற்றி காண முடியும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.  ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவது தான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 4
கடகம் 
வேலையில் அழுத்தமும் வீட்டில் இணக்கமின்மையும் சிறிது அழுத்தத்தை உருவாக்கலாம். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். பெயரளவில் தெரிந்தவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களால் முடியும் என நிச்சயமாக தெரியாத வரை எந்த வாக்குறுதியும் தராதீர்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7
சிம்மம் 
உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்து விடும். தேவைப்பட்டால் நண்பர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள். பயணத்துக்கு உகந்த நாளாக இன்றைய நாள் உங்களுக்கு அமையவில்லை. பழைய சுவையான அனுபவங்களை இன்று அசை போட்டு மீண்டும் உங்கள் துணையுடன் இன்பமாக பொழுதை கழிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 6
கன்னி 
ஆரோக்கியத்தைப் பொருத்தவரை இது டல்லான காலம். எனவே என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். குடும்ப ரகசிய செய்தி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால், மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 4
துலாம் 
இன்று உங்களுக்குப் பிடித்தமானதை செய்யுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். நீங்கள் அதிகம் கஷ்டப்படாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பொருத்தமான நாள். 
அதிர்ஷ்ட எண்: 7
விருச்சிகம் 
மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெற்றோரும் நண்பர்களும் முடிந்த வரை உதவுவார்கள். ஒரு அன்பான தகவல் மூலம் இன்றைய நாள் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். எதிர்கால டிரெண்ட்கள் பற்றிய ஒரு பார்வையை அது தரும். 
அதிர்ஷ்ட எண்: 8
தனுசு 
அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள்! எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். முதலீடு செய்வதற்கான கால சூழ்நிலை இது கிடையாது. சந்ததியினருக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் இருக்கும். பல்வேறு விஷயங்கள் ஒப்புதல் இல்லாத காரணத்தால் இந்த நாள் மிக நல்லதாக இருக்காது. 
அதிர்ஷ்ட எண்: 5
மகரம் 
உடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் போக முடியாது என்பதால் ஒரு பின்னடைவை சந்திப்பீர்கள். ஆனால் உங்களை முன்னெடுத்துச் செல்ல சரியான வழியை பயன்படுத்துங்கள். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும்  எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 5
கும்பம் 
அச்சம் எனும் பேயை எதிர்த்துப் போராடும்போது சில பாசிடிவான சிந்தனைகளுக்காக மனதை தயார்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் இந்த பிசாசின் அடிமையாகிவிடுவீர்கள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. உங்களை மகிழ்விக்க, குழந்தைகள் தங்களால் ஆனதைச் செய்வார்கள். 
அதிர்ஷ்ட எண்: 3
மீனம் 
பொறாமை ஏற்படுத்தும் நடவடிக்கையால் குடும்பத்தில் சிலர் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் உங்கள் நிதானத்தை இழக்கத் தேவையில்லை. இல்லாவிட்டால் நிலைமை உங்கள் கட்டுப்பாட்டை மீறி போய்விடும். சரி செய்ய முடியாதவற்றை சமாளித்துதான் ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்.
அதிர்ஷ்ட எண்: 1