யாருக்கெல்லாம் இனி இலவச மடிக் கணினி கிடையாது தெரியுமா?

 

யாருக்கெல்லாம் இனி இலவச மடிக் கணினி கிடையாது தெரியுமா?

கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன

12-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு இலவச மடிக் கணினி கிடையாது என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

laptop

தமிழக அரசானது அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி கொடுத்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களுக்குக் கணினி குறித்த அறிவு திறன் இன்னும் மேம்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் கணினி வாங்க முடியாத சூழலில் உள்ள சாமானிய மக்களின் பிள்ளைகளுக்கு இந்த அறிவிப்பானது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

sec

இந்நிலையில் இலவச மடிக் கணினி குறித்து தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை அறிவித்துள்ளது. அதில் 2017- 18 ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் படிப்பை கைவிட்டவர்களுக்கு இலவச மடிக் கணினி கிடையாது என்று கூறியுள்ளது.